Hey guys, இன்னிக்கு நாம கம்போடியால இருக்குற Preah Vihear கோவில்ல இருக்கோம். நான் ரொம்ப interestingஆன ஒரு விஷயத்த கண்டுபிடிச்சேன். உங்களுக்கு அது என்னன்னு காட்றேன் வாங்க. இது 12ஆவது centuryல கட்டின கோவில், இல்லையா ? அப்படின்னா இது கிட்ட தட்ட 900 வருஷங்கள் பழசு. இங்க நிறைய பெரிய பெரிய sandstone அப்படியே block blockஆ இருக்கு பாருங்க.
ஆனா வெளிப்படையா சொல்லனும்னா இது சாத்தியமே இல்லாத ஒரு technology. ஏன்னா இந்த பக்கம் பெரிய பெரிய கல்லால செஞ்ச blocks தெரியுது. ஆனா இங்க Corner-ல இருக்குற pieces-அ பாருங்க. உதாரணத்துக்கு இது ரெண்டு துண்டா இருக்க வேண்டிய கல்லு தான. ஆனா அதுதான் இல்ல. இந்த right angle-அ பாருங்க. இது ஒரே துண்டா இருக்கற கல்லுதான். கல்லா இல்லயான்னு கூட தெரியல. இது ஒரு geopolymer technologyயா கூட இருக்கலாம்.
ஏன்னா இதுக்கு நடுவுல எந்த connectionம் இல்ல. இங்க பாருங்க, அப்புறம் இங்கயும் பாருங்க. எங்கையுமே எந்த connectionsம் இல்ல. இங்க இந்த இடத்துல பாருங்க. என்னால இங்க தொட முடியாது. ஏன்னா அங்க ஒரு பெரிய சிலந்தி இருக்கு. ஆனா அந்த Corner-அ பாருங்க. அந்த corners-ல கோடுங்க எதாவது உங்களுக்கு தெரியுதா? இல்ல, இது ஒரே கல்லு தான்.
இது எந்த மாதிரியான technology? இந்த corners எல்லாம் எப்படி ஒரே கல்லுல செஞ்சிருப்பாங்க? அதுவும் இப்டி செய்யணும்னா ரொம்ப பிரமாதமான ஒரு engineering வேணும். இப்ப அந்த பக்கம் போயி அங்க என்ன இருக்குன்னு பாக்கலாம் வாங்க. மறுபடியும் இந்த pieceஅ பாருங்க, corners-ல connectionஏ இல்லாம இருக்கு, ஆனா இங்க பாருங்க.
இந்த ஒரு கல்லே எவ்ளோ நீளமா போகுதுன்னு பாருங்க. அதுமட்டும் இல்ல, இந்த கல்லு வளையுது. அதாவது இந்த கல்லு ஒரு குறிப்பிட்ட angleல வளஞ்சு வந்து மறுபடியும் 45டிகிரி angleல அப்டியே வெளிய வரைக்கும் போகுது. இந்த பாற எங்க போயி முடியுதுன்னு உங்களுக்கு காமிக்கணும்னா, நான் இங்கிருந்து வெளிய போக வேண்டி இருக்கும்.
இது ஒரு பாறையா இல்லாம கூட இருக்கலாம். இது நிஜமாவே ரொம்ப அற்புதமான ஒரு technology. 900 வருஷத்துக்கு முன்னாடியே இத எப்படி கம்போடியால கட்டுனாங்க இப்ப இங்க இருக்குற சுவரெல்லாம் உங்களுக்கு காட்றேன் பாருங்க. இதெல்லாம் பெரிய பெரிய blocks இருக்கற சுவர். உதாரணத்துக்கு, இந்த block-அ பாருங்க. இந்த block 90 டிகிரில இருக்கு.
இங்கையும் 90 டிகிரில போகுது. இது வரைக்கும் ok. ஆனா இங்க பாருங்க, ஒரு சின்ன வெட்டு மாதிரி இருக்கு பாருங்க. இத இங்க சரியா fit பண்றதுக்கு இப்படி செஞ்சிருப்பாங்க. இதெல்லாம் பாத்தா இந்த எல்லா blocks-யும் ஒரு jigsaw puzzle மாதிரியே தயார் பண்ணியிருப்பாங்கன்னு தோணுது. அதனால இத எதயும் சுலபமா வெளிய எடுக்க கூட முடியாது. இத பாருங்க, மறுபடியும் இங்க பாருங்க. இது எங்க வரைக்கும் போகுது பாருங்க. இங்க இந்த piece-அ பாருங்க. இது இங்க சரியா பொருந்தறதுக்கு இதுல ஒரு சின்ன வெட்டு மாதிரி இருக்கு பாருங்க.
இதுல இருக்குற ஒரு சில கல்லெல்லாம் ஒரு rectangle மாதிரியோ இல்ல ஒரு trapezoid மாதிரியோ இருக்கு. ஒத்துக்கறேன். ஆனா இங்க பெரும்பாலான கல்லெல்லாம் பாத்தீங்கன்னா ஒவ்வொரு 2D faceலயும் நாலு corner மட்டும் இல்ல. அதுக்கு மேல தான் இருக்கு. இது ஒரு ரொம்ப பிறமாதமான technologyயா இருக்கு. ஒவ்வொரு கல்லும், எவ்வளவு ஆயிரம் கிலோ இருக்கும்ன்னு எனக்கு தெரியல. அத வச்சு அவங்களால 900 வருஷங்களுக்கு முன்னாடியே இவ்ளோ பெரிய ஒரு jigsaw puzzle செய்ய முடிஞ்சிது. இத அவங்க மொதல்ல எப்படி செஞ்சிருப்பாங்க? நூல் வச்சி அளந்து, உளி சுத்தியல் வச்சி கஷ்டப்பட்டு உழைச்சு கட்டியிருப்பாங்க அப்படின்னு தான் நம்ப archaeologistsம் historiansம் வழக்கம் போல சொல்லிக்கிட்டு இருப்பாங்க.
ஆனா வெறும் உளியும் சுத்தியலும் மட்டும் வச்சு இத செய்யுறது சாத்தியமே இல்லன்னு தான் எனக்கு தோணுது. எங்கிட்ட இன்னுமும் நிறைய ஆதாரம் இருக்கு. இங்க போலாம் வாங்க. இதயெல்லாம் உளியும் சுத்தியும் மட்டும் வச்சு செஞ்சிருப்பாங்கன்னு உங்களுக்கு தோணுதா? நல்லா பாத்து சொல்லுங்க. இந்த காலத்துல இப்போ இந்தமாதிரி நம்மால செய்ய முடியுமா? இதெல்லாம் கூட ரொம்ப பாழடைஞ்சு போய் தான் கிடக்குது. Almost எல்லாமே அழிஞ்சிபோச்சி. 900 வருஷங்கள் பழசாயிட்டு, அப்பறம் Preah Vihear கோவிலே கம்போடியா தாய்லாந்து, இந்த ரெண்டு நாட்டோட எல்லைல இருக்கு.
அதனால ரெண்டு நாடுகளுக்கு நடுவுல நடந்த சண்டைங்களாலயும், ரெண்டு பக்கமும் குண்டு போட்டுக்கிட்டதாலயும் இந்த கோவிலே ரொம்பவும் செதஞ்சி போயிருக்கு. இது சிவனுக்காக கட்டியிருக்கற ஒரு ஹிந்து கோவில். இந்த கோவில்ல இருக்கற இந்த தூண் எல்லாம் பாருங்க. இத கண்டிப்பா வெறும் உளி சுத்தி மட்டும் வச்சு செஞ்சிருக்க முடியாது. நான் சொல்றத engineers கூட ஒத்துக்கறாங்க. இதயெல்லாம் Lathe technology வச்சி மட்டும் தான் செஞ்சிருக்க முடியும்.
ஒரு rotating mechanism அதாவது சுத்தற மாதிரியான machine இருந்தா மட்டும் தான் இந்த மாதிரி turns எல்லாம் செய்ய முடியும். இதே மாதிரி இன்னும் நெறைய இருக்கு. காட்றேன் பாருங்க. இங்க இந்த தூண பாருங்க. இங்க கொஞ்சம் சேதாரம் ஜாஸ்தி இல்லாம இருக்கு. கொஞ்சம் வெளிச்சமாவும் இருக்கு, பாருங்க.