Hey guys, பழைய காலத்து Indiaல electric battery எப்படி செஞ்சாங்க அப்படின்றத இப்ப நான் உங்களுக்கு செஞ்சு காட்ட போறேன். 4000 வருஷத்துக்கு முன்னாடியே அகத்திய முனிவர் இந்த batteryய பத்தி விளக்கமா சொல்லியிருக்காரு. Agastya Samhita அப்படின்ற அவரோட bookல அவரு என்ன சொல்லிருக்காரோ இப்ப நான் அத அப்படியே பண்ண போறேன்.
இந்த புக்ல ஒரு மண்பானைய container-அ use பண்ணிக்க சொல்ராங்க . அப்பறம் அதோட ரெண்டு metals எடுத்துக்க சொல்றாங்க. ஒன்னு Copper அதாவது தாமிரம், செப்பு அப்படின்னு தமிழ்ல சொல்லுவோம்.
இன்னொன்னு Zinc இத துத்தநாகம் அப்படின்னு சொல்லுவோம். இத ரெண்டுத்தையும் அந்த மண்பானைல சேத்து use பண்ண சொல்ராரு. So அந்த setup இப்படித்தான் இருக்கும். இத ஒரு voltmeter வச்சி test பண்ணா இதுவரைக்கும் எந்த chargeம் இதுல வரல. இப்ப, அந்த புக்ல என்ன போட்டிருக்குன்னா மண் பானைல மரத்தூள் போடணும்னு போட்டிருக்கு.
இப்ப நம்ம மண்பானைல மரத்தூள் போட்டா அது அந்த ரெண்டு metals- க்கும் நடுல போகும். அதனால ரெண்டு metalம் ஒன்னோட ஒன்னு ஒட்டிக்காம இருக்கும். short circuit ஆகாது. இப்ப voltage check பண்ணா கிட்ட தட்ட 0.4volts காட்டுது.
இது ஏற்கனவே வோல்ட்டேஜ் தயார் பண்ணிட்டு இருக்கத நம்மளால பாக்க முடியும். ஆனா இந்த batteryய முழுசா செஞ்சி முடிக்கறதுக்கு இன்னொரு வித்யாசமான ஒரு பொருள சேக்கணும்ன்னு அந்த bookல போட்டிருக்கு. அது என்னனா மயிலோட கழுத்து. பழைய காலத்து சமஸ்க்ரித புக்ஸ்ல இந்த பொருள shikhigreeva அப்படின்னு சொல்றாங்க. அப்படின்னா மயிலோட கழுத்துன்னு அர்த்தம். இப்ப கூட இது பத்தி நெறய மூட நம்பிக்கை இருக்கு.
சில பேர் நிஜ மயில் கழுத்த வச்சே battery செய்ய முயற்சி பண்றாங்க. ஆனா இது ரொம்ப தப்பு. ஏன்னா பொதுவாவே பழைய காலத்து புக்ஸ் எல்லாத்துலயுமே அதுலயும் முக்கியமா, alchemy அதாவது ரசவாதம் சம்பந்தப்பட்ட booksல ஜனங்கள குழப்பறதுக்காகவே நெறைய code words use பண்ணி இருப்பாங்க.
அவ்வளவு ஏன் Isaac Newton கூட “Green lion அதாவது பச்சை சிங்கம் use பண்ணணும்” அப்படின்னு சொல்லியிருக்காரு. ஆனா அந்த பச்ச சிங்கம்ன்னா என்னன்னு தெரியாம இன்னிக்கும் experts கொழம்பிகிட்டு தான் இருக்காங்க. நம்ப பழைய காலத்து இந்திய alchemy பிரகாராம், மயில் கழுத்துன்னா அது copper sulfate solution தான். பாருங்க, ரெண்டும் ஒரே colorல இருக்கு.
So, நான் copper sulfate வாங்கி, அத கரச்சி இதுல சேக்க போறேன். அத சேத்த உடனே voltage எப்படி வேகமா ஏறுது பாருங்க. இங்க இது ஒரு voltக்கு மேல காட்டுது. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா பழைய புக்ஸ்ல சொல்லி இருக்கற மாரி செஞ்சா நம்பளால current தயார் பண்ண முடியுதுன்னு தெரியுது. இப்ப நம்ப history புக்ஸ்ல நாம என்ன படிச்சோம்னு யோசிங்க? Alessandro Volta அப்படின்றவரால இந்த electric battery வெறும் 200 வருஷத்துக்கு முன்னாடி தான் கண்டுபிடிக்கபட்டிருக்கு” அப்படின்னு படிச்சோம். ஆனா அகத்தியர் இந்த batteryய நாலாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்டார்.
இதுல ஆச்சரியமான விஷயம் என்னனா Alessandro Voltaவும் இதே பொருள் எல்லாம் வச்சி தான் அவரோட “மொதல் batteryய” உருவாக்கியிருக்காரு. அவரும் அகத்தியர் மாதிரியே copper, zinc தகடு தான் use பண்ணி இருக்காரு. அதோட copper sulfate க்கு பதிலா அவர் sulfuric acid Use பண்ணி இருக்காரு, அவ்ளோ தான். இப்ப மறுபடியும் அந்த பழைய bookக்கு போகலாம். அதுல அகத்தியர் நூறு மண்பானய use பண்ண சொல்றாரு.
அத வச்சி ரொம்ப அதிகமான current தயார் பண்ணலாம்ன்னு சொல்றாரு. இங்க நான் வெறும் மூணு மண்பானய தான் ஒன்னோட ஒன்னு seriesஆ connect பண்ணியிருக்கேன். இதுல voltage, 3 voltsக்கு மேல ஏறுது பாருங்க. இப்ப இதுல நான் ஒரு சின்ன Led bulbஅ Connect பண்ண போறேன். அது எரியுதான்னு பாக்கலாம். எரியுது பாருங்க. வெறும் மூணு பானைங்களை வச்சதுக்கே bulb எரியுது. batteries use பண்ணி இந்த மாதிரி voltage எல்லாம் ஏத்தலாம் அப்படின்னு பழைய காலத்து bookல சொல்லியிருக்கறது ரொம்ப interesting ஆன ஒரு விஷயம்.
இப்ப நமக்கு ஏன் இத use பண்ணாங்கன்னு கேக்க தோணுது இல்ல? பழைய காலத்துல ஜனங்க நெறைய மண் பானைங்க use பண்ணி, அதிக voltageல current எல்லாம் எதுக்கு தயார் பண்ணாங்க. இந்த காலத்துல இருக்க நம்பள மாதிரி light, fan தேவைக்காக use பண்ணாங்களா? அப்படின்னா, பழைய காலத்துல electric bulbs use பண்ணதுக்கான ஆதாரம் ஏதாவது இருக்கா? பழங்காலத்து Egyptல இருக்கற Dendera கோவில்ல , இந்த மாதிரியான electric bulbsஅ use பண்றது பத்தி நெறைய வித்யாசமான சிற்பங்கள் இருக்கு.
இந்த சிற்பமெல்லாம் கூட நாலாயிரம் வருஷம் முன்னாடி செதுக்குனதுதான். அதோட இதுல பாம்பு மாதிரி filamentsஓட பெரிய பெரிய electric bulbs இருக்கு. இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா இந்த bulbsல இருந்து wires வருது, அதோட அது எல்லாம் ஒரு பெட்டிக்குள்ள போகுது.
ஒரு வேளை இந்த பெட்டில அகத்தியரோட நூறு volts தயார் பண்ற 100 cells இருக்குமோ? இந்த bulb எல்லாத்தையும் அது தான் எரிய வைக்குதோ? இது உண்மைன்னா, Giza Pyramid, Kailasa கோவில் மாதிரியான பழைய காலத்து structures எல்லாம் எப்படி அவ்வளவு சீக்கிரமா கட்னாங்கன்னு கூட நாம தெரிஞ்சிக்கலாம்.
உதாரணத்துக்கு, Kailasa கோவிலுக்கெல்லாம் போனா, உள்ள இருக்கற அறைகள் எல்லா ரொம்ப இருட்டா இருக்கும். அங்க எதுவுமே கண்ணுக்கு தெரியாது.. இங்க எல்லாம் வெளிச்சம் வர்றதுகாக கண்ணாடியோ இல்ல, metal sheetஓ வச்சி சூரிய வெளிச்சத்த reflect பண்ண கூட முடியாது.