800 வருஷத்துக்கு முன்னாடியே மின்சார பல்பா? காம்போஜ நாட்டில் கரண்ட் உபயோகித்த தமிழர்கள்!

Hey guys, நான் இன்னைக்கு கம்போடியா-ல இருக்குற Bayon கோவில் சிற்பங்கள தான் உங்களுக்கு காட்டப் போறேன். இந்த கோவில் குறைஞ்சது 800 வருஷமாச்சும் பழசா இருக்கும். இந்த கோவிலோட சிறப்பான அம்சம் என்னன்னா, ரொம்ப வேலைப்பாடோட நுணுக்கமா செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான்.

வாவ்! இந்த சிற்பத்தை பாருங்களேன்! ரெண்டு group சண்டை போட்டுட்டு இருக்காங்க. இந்த ரெண்டு குரூப்ஸயும் கவனிங்க. ஒரு side இருக்க ஹெல்மெட் போடாத வீரர்கள், இன்னொரு side இருக்க நல்ல அழகான, உறுதியான ஹெல்மெட் போட்ருக்கற வீரர்களோட சண்ட போட்டுட்டு இருக்காங்க. இதுல ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இந்த சண்டை தரைல நடக்கல.

தண்ணீல நடக்குது. நடுக்கடல்லயோ இல்ல நட்டாத்துலயோ இந்த சண்ட நடக்குற மாதிரி செதுக்கி இருக்காங்க. சண்டை போடுற ரெண்டு side வீரர்களும் ஆளுக்கொரு படகுலயோ, இல்ல கப்பல்லயோ இருக்காங்க. கீழ இன்னும் நெறைய ஆளுங்க படக ஓட்டிட்டு இருக்குறாங்க பாருங்க! வாவ்! இங்க இருக்குற வீரர்கள் கையில நெறைய ஆயுதங்கள வச்சி சண்ட போடுறாங்க. மறுபடியும் இங்க இருக்குறவங்கள பாருங்களேன்.

எவ்ளோ அமைதியா எதிர்ல உட்காந்துட்டு துடுப்பு போட்டுட்டு இருக்காங்க? இந்த வீரர்கள் சண்டை போட்டுட்டு இருக்காங்க சரியா? இதுல ஹெல்மெட் போடாம இருக்குறவங்க தான் khmers, கம்போடியாவ சேர்ந்தவங்க. ஹெல்மெட் போட்டுட்டு இருக்குறவங்க Cham மக்கள். இதுல யாரு ஜெயிக்கப் போறாங்க? actually இந்த khmer வீரர்கள் தான் ஜெயிக்க போறாங்கன்னு நான் நெனக்கிறேன்.

ஏன்னா, ஏற்கனவே எதிரி நாட்டு படகு மேல கயிற வீசி, அந்தப் படக அவங்க பக்கம் இழுத்துட்டு இருக்காங்க பாருங்க. அப்படியே அவங்க இங்க இருந்து அங்க போற மாதிரியும் இருக்கு. இதையெல்லாம் வச்சுத்தான் khmer வீரர்கள் ஜெயிப்பாங்க அப்படின்னு சொல்றேன்.

சரி, இதுல இருந்து நமக்கு வேற என்னென்ன விஷயம் கிடைக்குதுன்னு பாப்போம். வாங்க! இங்க மீன் நீந்துற மாதிரி இருக்குறதால, இது கண்டிப்பா கடல்லையோ இல்ல ஆத்துலயோ நடந்த சண்டைதான் அப்படின்னு நாம தெரிஞ்சிக்கலாம். இங்க சில பேர் தண்ணிக்குள்ள விழுந்துட்ட மாதிரி காமிச்சிருக்காங்க. ஒருவேளை நடக்குற போர்ல இவரு செத்து போயிருப்பாரோ? இந்த மொதல என்ன பண்ணுதுன்னு பாருங்களேன். உயிர காப்பாத்த போராடிட்டு இருக்கவரோட கால கடிச்சிட்டு இருக்கு! குத்துயிரும் கொல உயிருமா இருக்குறவர இதுதான் chance-ன்னு சாப்ட முயற்சி பண்ணிட்டு இருக்கு. இங்க பாருங்க. இன்னும் நெறைய டீடைல்ஸ் இருக்கு.

இங்க ஒரு முதலை ஒரு மனுஷன சாப்பிடுற மாதிரி இருக்குல்ல, இங்க தண்ணிக்குள்ள பாருங்க… இன்னும் நெறைய விதமான மனுஷங்கள செதுக்கி இருக்காங்க. சில பேரு தண்ணிக்குள்ள இருக்காங்க. சில பேரு உயிர காப்பாத்திக்க தண்ணிக்குள்ள குதிக்குறாங்க. சில பேரு ஏற்கனவே செத்து போய்ட்டாங்க. தண்ணிக்குள்ள நெறைய மனுஷங்க இருக்குற மாதிரி செதுக்கி இருக்காங்க. அத்தோட, நெறைய வகை மீனயும் செதுக்கி இருக்காங்க. உயிரோட இருக்கற ஒரு மனுஷனை இந்த முதலை சாப்டுட்டு இருக்கு. வாவ்! எல்லா சிற்பங்களுமே ரொம்ப detailed-ஆ இருக்கு.

இந்த ஸீன் ஒரு வெற்றி விழாவா இருக்கும்னு நான் நெனக்கிறேன். இதுவும் ஒரு படகுதான். khmer வீரர்கள் எல்லாரும் ஜெயிச்ச சந்தோஷத்துல ஆடிட்டு இருக்காங்க! இது நாம மொதல்ல பாத்த போர் ஸீனுக்கு அடுத்த ஸீன் போல. நடந்த போர்ல Cham வீரர்கள Khmer வீரர்கள் தோக்கடிச்சிட்டாங்க.

அதனால டான்ஸ் ஆடி அவங்களோட சந்தோஷத்த வெளிப்படுத்திட்டு இருக்காங்க. சரி, வேற ஏதாவது interesting-ஆன விஷயம் இங்க இருக்கான்னு பாப்போம் – சொல்லப்போனா இந்த கோவில் முழுக்கவே சுவாரசியமான நெறைய விஷயங்கள் இருக்கு. இந்த சிற்பங்கள் எல்லாமே பல நூறு வருஷத்துக்கு முன்னாடி கம்போடியால வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தாங்கன்னு நமக்கு காட்டுதுன்னு நான் நினைக்கிறேன்.

இந்த பொண்ண பாருங்க, இன்னொரு பொண்ணோட தலைல பேன் பாத்துட்டு இருக்காங்க. இவங்க என்ன பண்றாங்கன்னு தெரியுதா? சாம்பிராணி போடுற மாதிரி ஏதோ ஒரு புகைய போட்டு தலைல இருக்குற பேன எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. இப்ப நாம அடுத்த panel-க்கு போய் அங்க என்ன இருக்குன்னு பாப்போம். இப்போ நாம கீழ இருக்குற இந்த லெவெல மட்டும் எடுத்துக்கிட்டா, அது சாதாரண மக்களோட வாழ்க்கைய மட்டும் சொல்ற மாதிரி இருக்கு.

அண்ட், இந்த லெவெல எடுத்துக்கிட்டா, அது போர் வீரர்களோட கதைய சொல்ற மாதிரி இருக்கு. இங்க பாருங்க… ரெண்டு பேரு காட்டுப்பன்னிகள வச்சி சண்ட போட்டுட்டு இருக்காங்க. நாம இதுவரைக்கும் சேவல் சண்ட, கிடா சண்ட இதுதான் பாத்திருப்போம். ஆனா, இங்க பாருங்க, இது காட்டுப்பன்னி சண்டை! இதுவரைக்கும் இது மாதிரி ஒரு சண்டைய நான் பாத்ததே இல்ல. இந்த ஆளுங்க ஈட்டியயும் கேடயத்தையும் use பண்ணி ஏதோ தற்காப்பு கலைய கத்துக்கிட்டு இருக்காங்க. இந்த இடத்துல, ரெண்டு பேரு செஸ் வெளையாடிட்டு இருக்குற மாதிரி இருக்கு.

ஒரு டேபிள் மேல செஸ் காய்ன்ஸ் வச்சி இவங்க ரெண்டு பேரும் வெளயாடிட்டு இருக்காங்க. இதுக்கு மேல குத்துசண்டை போடுற மாதிரி இருக்கு பாருங்க. பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே குத்துசண்டை இருந்திருக்கு! இங்க ரெண்டு குரூப்ஸ் இருக்காங்க. ரெண்டு Groups-ம் ரொம்ப கோவமா வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காங்கன்றது அவங்க கைய நீட்டி நீட்டி பேசுறதுல இருந்தே நாம தெரிஞ்சிக்கலாம்.

About admin

Online Web Service Provider : Search Engine Optimization, Websites, Digital Marketing, Domain, Hosting, Emails, SSL and more

View all posts by admin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *