சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நகர்ந்து, பூமியின் மீது நிழலைப் பதித்து, சில பகுதிகளில் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு நிகழ்கிறது. சந்திரன் சூரிய வட்டின் ஒரு பகுதியை மட்டும் தடுக்கும் போது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் பார்சியல் சூரிய கிரஹண (partial surya grahan) ஏற்படுகிறது. இந்த வழக்கில், சூரியனின் வட்டு தோராயமாக 64% மறைக்கப்படும் என்று நாசா தகவல் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் மூலம் சூரிய கிரகணம் இன்னும் மூன்று நாட்களில் நிகழவுள்ளது. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA), இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் தேதி மற்றும் நேரத்தைப் பற்றிய தகவலை இப்போது அறிவித்துள்ளது. விண்வெளி ஏஜென்சியின் தகவல் படி, இந்த ஆண்டின் முதல் பகுதி சூரிய கிரகணம் ஏப்ரல் கடைசி நாளில் நடக்கும். அதாவது, வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி இந்த சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாகமான சூரிய கிரகணத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் இருந்து பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டில், நாசா கூறியது, “ஏப்ரல் 30 மாலை நேரத்தில் மேற்கு வானத்தில் சூரியன் அஸ்தமிக்கும் போது, சிலி, அர்ஜென்டினா, உருகுவே, மேற்கு பராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெருவில் தெளிவான வானம் உள்ளவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தின் பகுதியளவு மறைந்திருக்கும் சூரியனை நேரில் காண வாய்ப்புள்ளது என்று நாசா கூறியுள்ளது. தென்மேற்கு பிரேசிலின் ஒரு சிறிய பகுதி தெரியவும் வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. தென் அமெரிக்கா, அண்டார்டிகா மற்றும் தெற்கு மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இது தெரியும்.
[yotuwp type=”keyword” id=”JUNE 21 சூரிய கிரகணம்” ]