சோழ தேசத்தில் “பொன்னி நதி பாக்கணுமே”
என வந்தியத்தேவன் பயணிக்கும் முதல் பாடல் மிகச் சிறப்பாகவும் அருமையாகவும் வேளாண் மரபினரின் பண்பாட்டு அடையாளத்தை இவ்வுலகிற்கு பறைசாற்றி நிற்கும் விதமாக இந்த ஆடி மாதத்தில் வெளிவந்துள்ளது.
“நஞ்சைகளே புஞ்சைகளே…. ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே…” என்ற வரிகள் மனத்தைத் தொட்டன. படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்! பாடல் வரிகள் : ஓ.. காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்!
நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும்
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும்
சோழத்தின் பெருமைகூற சொல் பூத்து நிற்கும்
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல
பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன
மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ
பொன்னி மகள் லாலி லல்லா லாலி லல்லா லாலி லல்லா பாடி செல்லும் வீரா சோழ புரி பார்த்து விரைவா
நீ நாவுகழகா
தாவும் நதியாய்
சகா
கனவை
முடிடா
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல
செக்க செகப்பி நெஞ்சில் இருடி ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா
கூடாதே
ஓகோகோ
கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே தம்பியே
என்னாலும் வருமோடா
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல
செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே!
படம் : பொன்னியின் செல்வன் –
பகுதி 1 இயக்குநர் : மணிரத்னம்
பாடல் வரிகள் : இளங்கோ கிருஷ்ணன்
இசையமைத்து பாடியவர் : ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சிலர்.
ஓ.. காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்! நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும் பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும் சோழத்தின் பெருமைகூற சொல் பூத்து நிற்கும் பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல