திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் – அமைச்சர் லோ. முருகன்

இன்றைய தினம், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில்களில் சுவாமி வழிபாடு மேற்கொண்டேன்.

தமிழ் மக்களின் முதற்கடவுளான முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு செய்ய நினைக்கும் தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது.

பல்லாண்டு காலங்களாக இந்து மக்கள் வழிபாடு செய்து வரக்கூடிய திருப்பரங்குன்றம் மலையை, வருவாய்த் துறை ஆவணங்களில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தரப்பினர் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

எனவே, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்கள் தரிசிக்கின்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அறநிலையத் துறையை கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வில்,

@hindumunnani_tn அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.கதளி நரசிம்ம பெருமாள் அவர்கள், மதுரை மாவட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரும் உடன் கலந்து கொண்டார்கள். #SaveTiruparakundram

-source : https://x.com/Murugan_MoS/status/1891445338910908610

About admin

Online Web Service Provider : Search Engine Optimization, Websites, Digital Marketing, Domain, Hosting, Emails, SSL and more

View all posts by admin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *