ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் Tamil Nadu Day Event என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி அடிப்படையில் மெட்ராஸ் மாநிலம் உருவான நாளை நினைவுகூரும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பின்னர் 1969ல் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு அறிவிப்புப்படி, இந்த ஆண்டு தமிழ்நாடு நாள் விழா சென்னை அரசு அருங்காட்சியக அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்த விழா நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

Tamil Nadu Day Event விழாவின் முக்கிய அம்சங்கள்:

  • ஐந்து தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்ததற்கான நூலுரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
  • திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய 76 அறிஞர்களுக்கு தமிழ் செம்மல் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த விருதுகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இளம் தலைமுறையினரிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பதற்கும் உந்துதலாக அமைகின்றன. திருக்குறள் போன்ற உன்னத நூல்களை மாணவர்கள் முழுமையாக ஓதும் பழக்கம் தொடர வேண்டும் என்ற நோக்கில் அரசு இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது.

மாலை நேரத்தில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற இசை, கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் மக்களைக் கவர்ந்து ஈர்க்கும். தமிழகத்தின் பலதரப்பட்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்லூரி மாணவர்களுக்காக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இது இளம் தலைமுறையினரிடையே தமிழ் உணர்வையும் வரலாற்றுப் பெருமிதத்தையும் வளர்க்கும்.

தமிழ்நாடு நாள் வெறும் ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல. இது நமது மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு முயற்சி. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை தங்களது உருவாக்க தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது போல, தமிழ்நாடும் தனது வரலாற்று நாளை பெருமைப்படுத்துகிறது.

தமிழக அரசு இந்த தினத்தை ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளது. இது தமிழ் மொழியின் பெருமையையும், மாநிலத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்தும். அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்ட ாடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!

தமிழ்நாடு நாள் விழா – சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ( Tamil Nadu Day Event)

தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

தேதி: 01 நவம்பர் 2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: முரசொலி மாறன் பூங்கா, பெரம்பூர், சென்னை

கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு எழிலார்ந்த முறையில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி நிரல் – Tamil Nadu Day Event

நேரம்நிகழ்ச்சி விவரம்
6.00 – 6.30கலைமாமணி மதுரை முத்து குழுவினர் – நையாண்டி மேளம், கரகம், புரவியாட்டம்
6.30 – 7.00கலப்பை குழுவினர் – கழியல் ஆட்டம், ஓயிலாட்டம், சக்கைக்குச்சியாட்டம்
7.00 – 7.30மெட்ராஸ் கலைக்குழு – கம்பத்து ஆட்டம், ஓயிலாட்டம்
7.30 – 8.00கலைமாமணி முனுசாமி குழுவினர் – பெரிய மேளம்
8.00 – 8.30தமிழன் குழுவினர் – மல்லர் கம்பம்
8.30 – 9.00திலகவதி குழுவினர் – குறவஞ்சி கூத்து

தமிழர் பண்பாட்டின் அடையாளமான நாட்டுப்புறக் கலைகளை நேரில் ரசிக்கும் வாய்ப்பு இது. குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அனுமதி இலவசம் – அனைவரும் வருக! ( Tamil Nadu Day Event )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *