
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எழுதிய உணர்ச்சி மிகுந்த கடிதம். 2026 தேர்தலில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள்.
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வருவதாக உறுதியளித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் Vijay அவர்கள் தனது ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?
நமது அரசியல் எதிரியான Dravida Munnetra Kazhagamவும், கொள்கை எதிரியான Bharatiya Janata Partyவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிவதில்லை. எந்த நிர்பந்தத்திற்கும் குனியமாட்டான்.
மாபெரும் பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி மற்றும் மக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் இன்று ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த கட்சியை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்பதை வரும் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள்.
நேர்மை, சமூகநீதி மற்றும் ஜனநாயகத்தின் காவலராக திகழும் த.வெ.க மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
மக்களே…
உங்களின் அன்பு மட்டுமே எனக்கு மிகப்பெரிய சக்தி.
நீங்கள் அளித்த ஆதரவு தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.
எந்த அதிகாரமும், எந்த சக்தியும் நம்மை பிரிக்க முடியாது.
முக்கிய வேண்டுகோள்
வரும் ஏப்ரல் 23 தேர்தலில்,
குடும்பம் குடும்பமாக சென்று
திருவிழா போல வாக்களித்து
ஒரே தேர்வாக
